திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது.
ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் புொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோ
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ங
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவா
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நா
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையா
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்கு
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளு
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவா
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தெ
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறி
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீ
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லா
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவா
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தா
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்கா
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ள
உள் நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவா
மாலறியா நான்முகனும் காணா மலையினைநா
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசு
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியா
கோலமும் நம்மைஆட் கொண்டருளி கோதாட்டு
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவா
மானேநீ நென்னலை நாளைவந் துங்க
நானே எழுப்புவன் என்றலும் நாணா
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியா
தானேவந் தெம்மைத் தலையளித் தாட்கொண்டருளு
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவா
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவா
அன்னே இவையுஞ் சிலவோ பல அமர
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரா
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பா
என்னானை என்அரையன் இன்னமுதென் றெல்லோமு
சொன்னோங்கேல் வெவ்வேறாய் இன்னந் துயிலுதி
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவா
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கு
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கு
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலை
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவா
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வா
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவா
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொரு
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற் றிய
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோ
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோ
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவா
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமல
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடி
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலு
ஓத உலவா ஒருதோழன் தொண்டருள
கோதில் குலத்தரன் தன் கோயிற் பிணாப்பிள்ளைகா
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவா
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்ன
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பா
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்கு
மையார் தடங்கண் மடந்தை மணவா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டி
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவா
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடு
தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடு
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையா
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைக
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவா
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தார் பின்னும் அரவத்தா
தங்கள் மலம்கழுவு வார்வந்து சார்தலினா
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துந
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவா
காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பா
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவா
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமா
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூ
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியா
பேரரையர்க் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தா
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பா
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவா
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதா
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமு
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழ
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவா
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையி
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமே
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னரு
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவா
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போ
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவா
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தா
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கே
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்
கங்குல்பகல் எங்கண் மற்றொன்றுங் காண
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவா
போற் றி அருளுகநின் ஆதியாம் பாதமல
போற் றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்க
போற் றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற் றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்
போற் றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற் றிமால் நான்முகனுங் காணாத புண்டரி
போற் றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற் றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்