Jan 132023

அறத்துப்பால் -இல்லறவியல் -புதல்வரைப் பெறுதல்

 மக்கள்மெய் தீண்டல்

உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

பரிமேலழகர் உரை: உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).

Translation: To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear. Explanation: The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.