மவுனா லோவா ( நீண்ட மலை) என்பது ஐக்கிய அமெரிக்கா, அவாய் தீவில் அமைந்துள்ள ஐந்து எரிமலைகளுள் ஒன்றாகும். இதுவே உலகில் உள்ள எரிமலைகளில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. 2,035 சதுர மைல்கள் (5,271 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது. கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் மௌனா லோவாவின் உச்சி அமைந்துள்ளது. செயல்படும் கேடய எரிமலை வகையைச் சேர்ந்த இந்த எரிமலை அண்ணளவாக 75,000 கிமீ3 கனவளவைக் கொண்டது. ஆனாலும், இதன் உயரம் இதன் அருகிலுள்ள மவுனா கியா எரிமலையை விட 37 மீ குறைவானதாகும். இதன் எரிமலைக் குழம்பு அதிகமான நீர்ம நிலையிலும், சிலிக்கா-குறைவானதாகவும், வெடிக்கும் தன்மை அற்றதாகவும் உள்ளது.
| மவுனா லோவா | |
|---|---|
மவுனா லோவா எரிமலை |
|
| உயர்ந்த இடம் | |
| உயரம் | 13,679 ft (4,169 m) [1] |
| இடவியல் முக்கியத்துவம் | 7,079 ft (2,158 m) |
| புவியியல் | |
| அமைவிடம் | ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு |
| மலைத்தொடர் | ஹவாய் தீவுகள் |
| நிலவியல் | |
| பாறையின் வயது | 700,000–1 மில்லியன் |
| மலையின் வகை | கேடய எரிமலை |
| கடைசி வெடிப்பு | மார்ச் - ஏப்ரல் 1984 |
| Climbing | |
| First ascent | பண்டைய காலங்கள் |
| Easiest route | அய்னாபோ பாதை |
எரிகற்குழம்பு
மவுனா லோவா எரிமலை 700,000 ஆண்டுகளாக வெடித்து வருவதாகவும், 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் இது கடல்-மட்டத்தில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. இவ்வெரிமலையில் இருந்து அறியப்பட்ட பாறைகள் 200,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதல்ல.
கடைசியாக இவ்வெரிமலை வெடித்தது 1984 மார்ச் 24 முதல் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியிலாகும். அண்மைக்கால வெடிப்புகள் பெரும் சேதங்களை உண்டுபண்ணாத போதிலும், 1926 இலும் 1950 இலும் ஏற்பட்ட வெடிப்புகள் பல கிராமங்களை அழித்தன. ஹைலோ நகரம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கற்குழம்புகளினால் பகுதியாக உருவாக்கப்பட்டதாகும்.