உலக நாடுகளே ...
தமிழனாக பிறந்து விட்டால் நாங்கள் எங்கள் உரிமைகளை கேட்கக் கூடாதா ?
உம் எல்லோருக்கும் மனம் இருக்கிறதா ?
அதில் ஈரம் இருக்கிறதா .....
எம்மையும் எம்மொழியையும் அழிக்கும்
தமிழ் இனப்படுகொலை போர்க்குற்றம் அறிவீரோ ?
எங்களின் அலறல் உங்கள் செவியில் விழ வில்லையோ ...
பணமா கேட்டோம்
எங்களின் பனை மரங்களை தானே கேட்கிறோம் .....
எங்களின் ஊரை எங்களுக்கே மீட்டு தாரும் ....
எமக்கு வேண்டியதெல்லாம் எங்கள் தமிழ் ஈழம் ......
தமிழ் ஈழம் நிச்சயம் ஒரு நாள் மலரும் .....
அதை பார்க்க நான் இல்லா விட்டாலும் .....
என் தலைமுறை அதில் சந்தோசமாக நிம்மதியாக வாழும் .....
எந்த ஒரு குண்டுமழையும் இல்லாமல் ....
வன்முறை இல்லாமல் .....ரத்த வாடை இல்லாமல் ....உடல்களை புதைக்க கூட ஆள் இல்லாமல் ....
கத்தி அழ கூட முடியாமல் ....புன்னகையை மறந்து ....காந்தள் மலரின் வாசம் மறந்து ....பூத்த பூ உடனே கருகிய பொழுது கண் முன்னே ...
மறக்க முடியாது மண்ணில் போனாலும் ....
மனிதம் எங்கோ ? மனிதன் அங்கே ....
யாருடைய கண்ணீரிலும் மனிதன் சிரிக்க மாட்டான் ....
போர் என்றால் அதில் நீதி வேண்டும் ....
எங்கே அந்த நீதி ?
உலக நாடுகள் மௌனம் காப்பது பெரிய தவறு .....
தமிழ் நாட்டில் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற உணர்வு இருக்கிறதே ....
அதை எந்த வார்த்தையும் சொல்லிடாது ...
என் தாய் மண்ணை முத்தமிட வேண்டும் .....
எம் இனத்தின் வீரர்களின் ரத்தம் சிந்திய பூமி ....அதற்கு காணிக்கை எம் தமிழீழம் ......
எமக்கு வேண்டுவது என் நாடு ....தமிழ் ஈழநாடு....
தாயின் மடியில் கண்ணீர் சிந்தாமல் .....
தாயின் மார்பகங்களை வன்மம் கொண்டு பார்க்கும் பதர்கள் இல்லாமல் ....
எங்கும் பனைகளும் அதில் கூவும் குயில்களும் ....
ஓடும் எங்கள் நதியும் அதில் மீன் பிடித்து விளையாட நாங்களும் ....
இப்படியே செல்லவேண்டும் நாட்களும் ......
எங்கள் தமிழீழத்தில் .....
வாழ்க என் தாய் மண்ணும் ....என் தமிழும் .....
என்றும் வாழும் எம் இனம் எங்கும் ....எம் மொழியோடு .....
யாதும் ஊரே ......
எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து