மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்.
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்.
காரியத்தில் உறுதி வேண்டும் ;
பெரிய கடவுள் காக்க வேண்டும்; மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும் !
-சுப்பிரமணிய பாரதியார்