Feb 022023

வடுக்கள்

வலிகள் சுமந்த மண்ணில்

வடுக்கள் ஆறவில்லை !

மரணத்தை வென்ற பின்னும்

மாறுதல் ஏதும் இல்லை !

 

ஆறாத காயங்களோடே

ஆதாரமற்ற வாழ்க்கை !

அங்கவீனமும் வாழ்வின்

அங்கமாகிப் போனது !

 

இழந்தவைகள் போக

இன்மை நிலை இன்னுமுண்டு !

தொலைத்தவைகள் போக

தொடர்கதைகள் இன்றுமுண்டு !

 

குருதித் துளிகளில்

குறிப்பெடுத்தவர்களே !

இவர்கள் எதிர்காலத்தையும்

இனி நினைவில் கொள்ளுங்கள் !

 

-பொலிகையூர் ரேகா