Feb 042023

அறிவியல் தகவல்கள்

  1. அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் – போலிக்கால்கள்
  2. வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது – ஹார்மோன்கள்
  3. புவி நாட்டம் உடையது – வேர்
  4. இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் – வால்வாக்ஸ்
  5.  டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் – புகையிலை
  6.  ரேபிஸ் – வைரசினால் உண்டாகிறது.
  7. முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது – ஹைடிரா
  8. நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு – கிளாமிடோமானஸ்
  9. மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி – பிளாஸ்மோடியம்
  10. அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு – மண்புழு
  11. தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் – ஆர்.என்.ஏ
  12.  எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் – எச்ஐவி
  13.  பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
  14. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் – ஹீமோகுளோபின்
  15. தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – யானை
  16. ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு – சிங்கம்
  17. அனைத்து உண்ணிக்கு உதாரணம் – மனிதன்
  18.  விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது – அமீபா
  19. ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்
  20. அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது – பிளாஸ்மோடியம்