Feb 072023

கொக்குவில் இந்துக் கல்லூரி.

கொக்குவில் இந்துக் கல்லூரி (Kokkuvil Hindu College) இலங்கையில், யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகும். இது 1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. கொக்குவிலில் காங்கேசன்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது ஒரு கலவன் பாடசாலையாகும்.

அதிபர்கள்

ஈ. செல்லையா (1910-1926)

எஸ். தியாகராஜா (1926-1928)

எம். கார்த்திகேசு (1928-1943)

எஸ். சீனிவாசகம் (1943-1946)

வி. நாகலிங்கம் (1946-1948)

ஹண்டி பேரின்பநாயகம் (1949-1960)

சி. கே. கந்தசாமி (1960-1971)

பி. எஸ். குமாரசாமி (1971-1972)

எம். மகாதேவா (1972-1980)

ஏ. பஞ்சலிங்கம் (1980-1991)

ஆர். மகேந்திரன் (1991-1995)

ஜி. கணபதிப்பிள்ளை (1995-1996)

பி. கமலநாதன் (1996-2007)

ஏ. அகிலதாஸ் (2007-2012)

வி. ஞானகாந்தன் (2012- )

Kokuvil Hindu College
கொக்குவில் இந்துக் கல்லூரி
முகவரி
காங்கேசன்துறை வீதி, கொக்குவில் கிழக்கு
கொக்குவில்யாழ்ப்பாண மாவட்டம்வட மாகாணம், இலங்கை
இலங்கை
அமைவிடம் 9°41′42.10″N 80°0′53.10″E
தகவல்
வகை தேசியப் பாடசாலை
சமயச் சார்பு(கள்) இந்து
நிறுவல் 1910
நிறுவனர் செல்லையா
பள்ளி மாவட்டம் யாழ்ப்பாணம் கல்வி வலயம்
ஆணையம் வட மாகாண சபை
பள்ளி இலக்கம் 1002004
அதிபர் திரு வி.ஞானகாந்தன்
ஆசிரியர் குழு 87
தரங்கள் 1-13
பால் கலவன்
வயது வீச்சு 5-18
மொழி தமிழ்ஆங்கிலம்
School roll 2,183
இணையம்

kokuvilhindu.நெட்

கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடி , இலச்சனை

வரலாறு

எமது கொக்குவில் இந்துக் கல்லூரியின் கொடியானது 1940ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

நிறங்களும் குறிக்கோளும்

கல்லூரியின் கொடியானது “சிவப்பு” நிறத்தையும், “வெள்ளை” நிறத்தையும் கலந்த நிறங்களாக கொண்டு துணியால் உருவாக்கப்பட்டது. இதில் சிவப்பு நிற கிடைமட்டகோடு “வெற்றியையும்”, வெள்ளை கிடைமட்டகோடு “தூய்மையையும்” குறிக்கின்றது.

இக்கொடியானது ஆயிரத்து ஆயிரத்தி இரு நூறு(1200mm) மில்லிமீற்றர் (மி.மீ) நீளமும், தொளாயிரத்துபத்து (910mm) மில்லிமீற்றர் (மி.மீ) அகலமும் கொண்டதாக அமையபெற்றுள்ளது.

இக்கொடி அமைப்பில் ஆறு (6) சிவப்பு நிற கிடைமட்டகோடுகளும், ஏழு (7) வெள்ளை நிற கிடைமட்டகோடுகளும், சேர்ந்து மொத்தம் பதின்மூன்று (13) சம கிடைமட்ட கோடுகளும் கொண்டிருக்கும். .

ஒவ்வொரு சிவப்பு நிற, வெள்ளை நிற கிடைமட்ட கோடுகளும் ஏழுபது (70mm) மில்லி மீற்றர் (மி.மீ) அகலமும், ஆயிரத்து நூற்றிருபது(1200mm) மில்லி மீற்றர்(மி.மீ) நீளமும் கொண்டதாக அமையபெற்றுள்ளது. இவ்விரு நிறங்களினால் அமைக்கப்பட்ட கல்லூரி கொடியின் மத்தியில் எமது கல்லூரியின் (இலச்சினை) சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். 

படம் - 1
குறிப்பு: “5” மடங்கு அளவு குறைத்து படங்கள் வரையப்பட்டுள்ளது.
 
படம் - 2

குறிப்பு: “10” மடங்கு அளவு குறைத்து வரையப்பட்டுள்ளது.