Mar 032023

திருநாவுக்கரசர் வரலாறு பாகம் 01

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.

அப்பர் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

பிறப்பு திருவாமூர்
இயற்பெயர் மருணீக்கியார்
தலைப்புகள்/விருதுகள் நாயன்மார், மூவர்
தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி
மேற்கோள் நற்றுணையாவது நமச்சிவாயவே
நால்வர்
தலைப்புகள்/விருதுகள் நாயன்மார்சமயக்குரவர்
தத்துவம் சைவ சமயம் பக்தி நெறி

அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்

திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்

அப்பர் சுவாமிகள்

இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

இவரைத் திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.

பெயர்கள்.

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளன.

மருணீக்கியார் - இயற்பெயர்.

தருமசேனர் - சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்.

நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்.

அப்பர் - திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்.

உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.

தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்.

மிகுதி அடுத்த வாரம்...