Mar 112023

அறிவியல் தகவல்கள்.

  1. கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
  2. பிளேக் நோய்க்கான கடத்தியாக செயல்படுவது – சீனோப்சில்லா
  3. பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா – எர்சினியாபெஸ்டிஸ்
  4. இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் – இவியா பிரேசியன்சிஸ்
  5. இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டோபர் கொலம்பஸ்
  6. இரப்பர் தாவரரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இர்ப்பர் பெயரிட்டவர் – ஜோசப் பிரிஸ்ட்லி
  7. இரப்பர் தாவரத்தின் தாயகம் – தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் பள்ளத்தாக்கு
  8. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பில் இரப்பர் சாகுபடி நடைபெறுகிறது – கன்னியாகுமரி
  9. இரப்பர் மரத்திலிருந்து கிடைக்கும் பால் போன்ற திரவத்தின் பெயர் – லேடக்ஸ்
  10. இட்லி பூவின் தாவரவியல் பெயர் – இக்சோரா
  11. மகரந்தத் தூள் சூலக முடியை அடைவதன் பெயர் – மகரந்தச் சேர்க்கை
  12. இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? – சிவப்பு அணு
  13. இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? – ஹிமோகுளோபின்
  14. வாயுக்களை கடத்த உதவுவது எது? – ஹிமோகுளோபின்
  15. உட்கரு உள்ள ரத்த அணு எது? – வெள்ளை அணு
  16. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? – 5,000 முதல் 10,000 வரை
  17. நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? – வெள்ளை அணு
  18. ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? – தட்டை அணுக்கள்
  19. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? – 1,50,000 முதல் 3,00,000 வரை
  20. உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? – ரத்தம்