Mar 122023

நீரிழிவு நோய்

உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர். இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.[8] 1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும். இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது. நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படவராக ஆண்கள் காணப்படுகின்றனர். இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன.

நீரிழிவு நோயின் வகைகள்

 கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.

நீரிழிவின் பெரும்பாலான முக்கிய அறிகுறிகளின் மீள்பார்வை

நீரிழிவில் மூன்று வகைகள் உண்டு.

முதலாவதுவகை

முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

இரண்டாவது வகை

இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.

மூன்றாவது வகை

மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.