திருவாங்க மாலை திருப்பதிகம்
திருநாவுக்கரசர், 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.
அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
ஈசனுடைய அடிகளில் சரணடைந்தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும்" என்று கூறிய அப்பர் அடிகள், "அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது; வீசுகின்ற தென்றல் போன்றது; இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது; தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது" என்கிறார். அவர் உதாரணமாகக் கூறிய "அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே" என்கிறார் அப்பர்!
திருவதிகை வீரட்டானம் முதற்பதிகப்பாடல்:
கூற்றாயின வாறு விலக்ககலீர் கொடுமை பலசெய்தனநான் அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை யம்பானே.
இசை ஞானம்
திருநாவுக்கரசர், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது.
இவருடைய பாடல்களில், கீழ்க்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.
திருநாவுக்கரசரின் குருபூசையானது, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.