Mar 262023

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் பாதிப்படைவோர்.

நீரிழிவு நோய் பாதிப்பிற்கு வயது தடையல்ல. இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள்

இரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வைஇழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு முதலான நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும்.

வகைப்பாடு.

நீரிழிவில் முதலாவது மற்றும் இரண்டாவது வகைகளின் ஒப்பீடு

சிறப்பியல்புகள் முதலாவது வகை இரண்டாவது வகை
தோற்றம் திடீரென்று படிப்படியாக
தோன்றும் வயது பெரும்பாலும் குழந்தைகளில் பெரும்பாலும் பெரியவர்களில்
உடல்வாகு மெலிந்த அல்லது சாதாரணமான பருமனான
கீட்டோ அமிலத்துவம் சாதாரணம் அரிது
தன்னெதிர்ப்பிகள் வழக்கமாக உண்டு இல்லை
அகவழி இன்சுலின் குறைவு (அ) இல்லை சாதாரணம், குறைவு
(அ) அதிகம்
இரட்டைக் குழந்தைகளில்
இசைவு
50% 90%
நீரிழிவு பரவியுள்ளமை

~10%