Nov 262022

மாவீரர் நாள் 2022

நம் தேசத்தின் விடியலுக்காக  தம் இன்னுயிரை தந்த நம் காவல்தெய்வங்களாம் மாவீரர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்களிற்கு  நினைவேந்தல் செளத்தென்ட் தமிழ் கல்விக்கூடத்தில் இன்று (26/11/2022) மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
இதன் முதல் நிகழ்வாக நாம் வாழும் தேசத்தின் தேசியக்கொடியான பிரித்தானிய தேசியக்கொடியை கேம்பிரிட்ச் சர்வதேச தமிழ் சாதாரண தர தமிழ் பரீட்சையில் A தரத்தில் சித்தியெய்திய மாணவன் செல்வன் அஜய் அரன்ராஜ் ஏற்றிவைக்க கேம்பிரிட்ச் தமிழ் சாதாரண தர மாணவன் செல்வன் பானுஜன் தவராசா கொடியினை எடுத்துக் கொடுத்தார். 
அடுத்ததாக தமிழீழ தேசியக்கொடியை கல்விக்கூட ஆசிரியையும் மாவீரன் 2ம் லெப். பொழில்நெஞ்சனின் சகோதரியுமாகிய திருமதி தாட்சாயினி காண்டீபன் அவர்கள் ஏற்ற செல்வி வீனு செல்வகுமார்  அவர்கள் கொடியினை  எடுத்துக் கொடுத்தார். 
ஈகைச் சுடரினை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய  கடல்  வெளி  சமரில் வீரச்சாவை தழுவிய வீரவேங்கை ரட்ணா அவர்களின் சகோதரன் திரு க செல்வகுமார் அவர்கள் ஏற்றிவைக்க மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் வருகை தந்திருந்த அனைவரும் தமது கைகளில் இருந்த மின் விளக்குகளை ஏற்றினார்கள். 
துயிலும் இல்லப் பாடலுக்குப் பின் மலர்வணக்கம் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து நாம் வாழ தம்முயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து நம் கல்விக்கூட மாணவர்கள் நிகழ்த்திய  எளிர்ச்சி பாடல்கள், கவிதை மற்றும் பேச்சு போன்ற நிகழ்வுகள் அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்தது. 
இதனைத் தொடர்ந்து தேசியத்தலைவரின் 68ம் அகவைநாளை முன்னிட்டு எமது பாடசாலை மாணவியின் பெற்றோர்களால் உகந்தளிக்கப்பட்ட கட்டிகை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இறுதியாக கொடிகையேந்தலுடன் நிகழ்வுகள் முடிவுற்றன. 
இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மாணவச்செல்வங்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மற்றும் முத்தமிழ் மன்ற உறவுகள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 
நன்றி
நிர்வாகம்
சௌத்தென்ட் தமிழ் கல்விக்கூடம்