Nov 302022

வெள்ளை முயல்

வெள்ளை முயல் ஓடுது

        வேகமாக ஓடுது

குள்ள முயல் ஓடுது

        குதித்து குதித்து ஓடுது

முத்துப் போன்ற கண்ணினால்

         மேலும் கீழும் பார்க்குது

தத்தி தத்தி விண்ணிலே

          தாவிக் குதிக்க பார்க்குது

நெட்டையான காதையே

           நீட்டி நீட்டி ஆட்டுது

குட்டையான வாலையே

          குறு குறுவென்று ஆட்டுது