Dec 082022

செத்தொழிந்து போகாதுசிதை மீளும் தமிழ் ஈழம்…!

செத்தொழிந்து போகாது

சிதை மீளும் தமிழ் ஈழம்

 

புலிப் படை தான் தொடக்கி

புயலாகி நின்ற தலைவன்

 

தாய் நிலத்தைக் காதல் செய்தே

தம் வாழ்வைக் கழித்த பெண்கள்

 

துப்பாக்கி நெஞ்சேற்றி துயர் தனை

துடைத்த ஆண்கள்

 

விடம் தனைக் கழுத்தேற்றி ஈழத்தை

காத்த புலிகள்

 

கடல் தனை கண் போன்றே

காத்திட்ட கடல் புலிகள்

 

வான் ஏறிச் சென்று பகை

கதை முடித்த வான் புலிகள்

 

பெரு நெருப்பில் வெடியாகி

உடல் நொறுக்கும் கரும் புலிகள்

 

நிலம் தனை மீட்கும் போரில்

உயிர் ஈகம் புரிந்த மாந்தர் .

 

பலம் என படையாய் நின்றே

பகை தனை கலைத்த மக்கள்

 

குலம் காக்கும் போரை வெல்ல

பணம் தந்த புலம் பெயர்ந்தோர்

 

நிலை காக்க மண்ணில் நின்று

உலை நெருப்பில் வீழ்ந்தவர்கள்

 

எல்லையில் நின்று எங்கள்

நிலை காத்த எல்லைப் படைகள்

 

புலிக்கென்று துணையாகி

போராடும் துணைப்படையோர்

 

உயிர் ஈந்து நிலம் மீட்க

உறுதி தந்த மாவீரம் .

 

எத்தனை உயிர் ஈகம்

எத்தனை பெரும் சோகம்

 

அத்தனைக்கும் பதில் எழுதும்

அறத்தின் போர் புரியும்

 

செத்தொழிந்து போகாது

சிதை மீளும் தமிழ்ஈழம்

 

-கவிப்புயல் சரண்..