Dec 112022

திருக்குறள் - அறத்துப்பால் -பாயிரவியல் - அறன்வலியுறுத்தல்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

பரிமேலழகர் உரை:

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.

Translation:

No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.

Explanation:

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.