இந்தத் திருப்பதிகம் எழுந்த சூழல்:
சீர்காழிப் பொய்கைக்கரையிலே உமாபிராட்டி யாரின் ஞானப்பாலை உண்டபின் வாயில்பால் ஒழுக நி்ன்றிருந்தார் பிள்ளையார்; இக் கோலத்தைக் கண்ட அவர் தந்தையார் சிவபாதவிருதயர், கையில் சிறுகோல் கொண்டு அம்மூன்று வயதுப்பிள்ளையை "எச்சில்படும்படி இப்பாலூட்டினாரைக் காட்டுக" என மிரட்டிக் கேட்டபோது, பிள்ளையார் கண்களில் நீர்மல்கத் தம்மையாட்கொண்ட 'திருத்தோணியப்பரை'த் தமது வலது திருக்கரவிரலாற் சுட்டிக்காட்டிப் பாடியது.
சிவபாத இருதயர்= 'சிவபெருமானின் திருப்பாதங்களைத் தம் இதயத்தில் வைத்திருப்பவர்' என்று பொருளாம்.
பார்க்க:
திருஞானசம்பந்தர்- 'தோடுடைய செவியன்'
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
நமச்சிவாயத்திருப்பதிகம்
மாலை மாற்று.
திருப்பிரமபுரம்
தொகு
திருப்பிரமபுரம் - பண் - நட்டபாடை
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.