Dec 192022

காலி கலங்கரை விளக்கம்.

காலி கலங்கரை விளக்கம்  இலங்கையில் காலியில் அமைந்துள்ள ஒரு கடற்கரை கலங்கரை விளக்கம் ஆகும். இது இலங்கை துறைமுக அதிகாரசபையால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அமைவிடம்.

காலிக் கோட்டை

காலி

தென் மாகாணம்

இலங்கை.

ஆள்கூற்று  6°01′28.48″N 80°13′09.76″E
கட்டப்பட்டது 1848 (முதலில் கட்டப்பட்டது).
ஒளியூட்டப்பட்டது. 1939 (தற்போதுள்ளது)
தானியக்கம். ஆம்
கட்டுமானம். வார்ப்பிரும்பு.
உயரம். 26.5 மீட்டர்கள் (87 ft)
குவிய உயரம். 28 மீட்டர்கள் (92 ft).
ஒளி மூலம். மின்சாரம்.
வீச்சு. 47 கடல் மைல்கள் (87 km; 54 mi).
சிறப்பியல்புகள். Fl (2) W 15s.
Admiralty எண். F0830.
NGA எண். 27284.
ARLHS எண். SLI-0018.
மேலாண்மை முகவர். இலங்கை துறைமுக அதிகார சபை.

இது இலங்கையின் மிகப் பழமையான ஒளி நிலையம் ஆகும்.  இது 1848 ஆம் ஆண்டு 24.5 மீற்றர் (80 அடி) உயரத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இக் கலங்கரை விளக்கம் 1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் அழிந்தது. பின், 1939 ஆம் ஆண்டு 26.5 மீட்டர் (87 அடி) உயரத்தில் தற்போதுள்ள கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. தற்போதுள்ள கலங்கரை விளக்கமானது பிரித்தானியர்களால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்திலிருந்து 100 மீட்டர் (332 அடி) தொலைவில் அமைந்துள்ளது .

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளம் மற்றும் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமான பண்டைய காலி கோட்டையில் இந்த ஒளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  கலங்கரை விளக்கம் மூலோபாய ரீதியாக தெற்கு முனையில் அமைந்துள்ளது. சாலை மட்டத்திலிருந்து சுமார் 6 மீட்டர் (20 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது பாயிண்ட் உட்ரெக்ட் பாசுடன் என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காலி துறைமுகத்திற்குள் நுழையும் எந்தவொரு கப்பலையும் முழுமையாக பார்வையிடலாம்.