Dec 212022

வெள்ளை நிறத்தொரு பூனை

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்

வீட்டில் வளரது கண்டீர்

பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை 

பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்

சாந்து நிறமொரு குட்டி 

பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப்

பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறம் இருந்தாலும் - அவை

 யாவும் ஒரேதரம் அன்றோ? 

தேற்ற மென்றுஞ்சொல்ல லாமோ?

இந்த நிறம்சிறி தென்றும் - இஃ

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்- அதில் 

மானுடர் வேற்றுமை இல்லை.

எண்ணங்களை செய்கைகள் எல்லாம் - இங்கு 

யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

 

  -மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி